மழை நீரில் சிக்கிய காவல்துறைக்கு சொந்தமான மீட்பு வாகனம்.. நீண்ட நேர முயற்சிக்கு பின் மீட்ட காவலர்கள்..!

0 2484
மழை நீரில் சிக்கிய காவல்துறைக்கு சொந்தமான மீட்பு வாகனம்.. நீண்ட நேர முயற்சிக்கு பின் மீட்ட காவலர்கள்..!

சென்னை பெரவள்ளூர் காவல் நிலையம் அருகே, விதி மீறும் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு பயன்படும் காவல்துறை சொந்தமான வாகனம், மழை நீரில் சிக்கி, நீண்ட முயற்சிக்கு பின் மீட்கப்பட்டது.

பெரவள்ளூர் பகுதியில் நான்கு நாட்களாக மழை நீர் வடியாமல் குளம் போல் தேங்கி நிற்கும் நிலையில், பெரவள்ளூர் காவல் நிலையம் உள்ள சிவ இளங்கோ சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக காவலர் குடியிருப்பில் இருந்து படகு மூலமே காவலர்கள் காவல் நிலையம் சென்று வருகின்றனர். இதேபோல், சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் 4 நாட்களாக மழை நீர் வடியாமல் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments