400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மோனாலிசா ஓவியத்தின் பிரதி ரூ. 1.80 கோடிக்கு விற்பனை

0 2277

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மோனாலிசா ஓவியத்தின் பிரதி, ஒரு கோடியே 80 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

1503ம் ஆண்டு லியொனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட உலகப்புகழ் பெற்ற மோனலிசா ஓவியம் பாரிஸில் உள்ள லூவார் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மோன லிசா ஓவியம் வரையப்பட்ட சில ஆண்டுகளில் மேலும் சில ஓவியர்கள் அதை போலவே அச்சசலான பிரதிகளைத் தீட்டினர். அவ்வாறு தீட்டப்பட்ட பிரதி ஓவியம் ஒன்று கடந்த ஜூன் மாதம் 25 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

தற்போது மற்றொரு பிரதி ஓவியம் ஒரு கோடியே 80 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments