சென்னையில் தொடரும் கனமழையால் 8 விமான சேவைகள் ரத்து

0 3191

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில் 8 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை விமான நிலையம் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மோசமான வானிலை காரணமாக மதுரை, ஷார்ஜா, திருச்சி, மும்பையில் இருந்து சென்னைக்கு வரும் 4 விமானங்களும், சென்னையில் இருந்து அந்த 4 இடங்களுக்கு செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் தாங்கள் முன்பதிவு செய்துள்ள விமான நிறுவனங்களின் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments