இரவு நேரங்களிலோ மக்களுக்கு முன்னறிவிப்பின்றியோ ஏரிகள் திறக்கப்படாது-அமைச்சர் உறுதி

0 2531

தமிழ்நாட்டில் ஏரிகள் இரவு நேரங்களில் திறக்கப்பட மாட்டாது என்றும் பகல் நேரங்களில் மட்டுமே திறக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பகல் நேரங்களிலும் முன்னறிவிப்பின்றி ஏரிகள் திறக்கப்பட மாட்டாது எனக் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கனமழை காரணமாக திருவாரூர், மதுரை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று 3 பேர் உயிரிழந்ததாகவும், 950 வீடுகள் இடிந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், வங்கக் கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் சென்ற 33 ஆயிரத்து 773 படகுகள் பத்திரமாக கரை சேர்ந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், பல்வேறு பகுதிகளில் 20 முதல் 30 சென்டி மீட்டர் அளவிற்கு மழை எதிர்ப்பார்க்கப்படுவதால் ஆட்சியர்கள் முன்னேற்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments