வெள்ளம் பெருக்கெடுப்பதால் தடை விதிக்கப்பட்ட தரைப்பாலத்தில் ஆபத்தை உணராமல் குத்தாட்டம் போடும் சிறுவர்கள்

0 2555

விழுப்புரம் மாவட்டம் காணை அருகே வெள்ளம் பெருக்கெடுக்கும் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆபத்தை உணராமல் சிறுவர்கள் அதில் ஆட்டம் போட்டு வருகின்றனர்.

அகரம் சித்தாமூர் கிராமங்களுக்கு இடையே செல்லும் பம்பை வாய்க்காலின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பெண்ணையாற்றில் இருந்து பிரியும் இந்த வாய்க்காலை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்வதால், அவ்வழியாக போக்குவரத்துக்கு போலீசார் தடை விதித்து தடுப்புகள் அமைத்திருந்தனர்.

ஆனால் ஆபத்தை உணராமல் அப்பகுதி மக்கள் பாலத்தை போக்குவரத்துக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். சிறுவர்களும் தண்ணீரில் ஆட்டம் போட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments