முழுகொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை ; காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0 2270
காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையானது முழுகொள்ளளவை எட்டும் தருவாயில் இருப்பதால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு தற்போது வரும் நீர் வரத்தானது 21 ஆயிரம் கன அடியாக உள்ளநிலையில், காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவானது 20 ஆயிரம் கன அடியாக உள்ளது.

நீர் வரத்து மேலும் அதிகரித்தால் வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கும் என்பதால், ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றாங்கரையை ஒட்டியுள்ள கிராமங்களான அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை, சின்னபள்ளம், பவானி, காளிங்கராயன் பாளையம் ஆகிய பகுதியில் காவிரியாற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிக்கு செல்லும்படியும், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும் வருவாய் துறையின் சார்பாக தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கும் வருவாய் துறையினர் மற்றும் உள்ளாட்சித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments