கட்டுப்பாட்டை இழந்த பைக்.. துணிக்கடையில் நுழைந்ததால் பரபரப்பு..!

0 5025

தெலுங்கானாவில் எதிர்பாராத நேரம் பார்த்து பைக் ஒன்று துணிக்கடைக்குள் புகுந்தது. அதில்  கடைக்குள் இருந்தவர்களும், பைக் ஒட்டி வந்த நபரும் உயிர்தப்பினர்..!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் பஜார் வீதியில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. அதில் அதிவேகமாக வந்த அந்த பைக், அங்கிருந்த துணிக்கடை ஒன்றுக்குள் புகுந்தது.

எதிர்பாராத விதமாக வாகனம் உள்ளே புகுந்ததை எதிர்பார்க்காத பணியில் இருந்த இரு பெண்கள் உட்பட மூவர் விபத்திலிருந்து தப்பினர். மேலும், பைக் ஓட்டி வந்த நபரும் பெரும் விபத்திலிருந்து தப்பினார்.

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்நிலையில் கம்மம் காவல்துறையினர் விபத்துக்குள்ளான பைக்கை பறிமுதல் செய்து விசாரணை செய்ததில், பிரேக் பழுதானதால் அதிக வேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து துணிக்கடைக்குள் புகுந்தது தெரியவந்தது. கடந்த திங்களன்று நடைபெற்ற இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments