புதுச்சேரியில் கனமழை ; கடந்த 24 மணிநேரத்தில் 9.5 செ.மீ. மழைப்பதிவு

0 2341
கடந்த 24 மணிநேரத்தில் 9.5 செ.மீ. மழைப்பதிவு

புதுச்சேரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 9.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

புதுச்சேரி நகரப்பகுதி கடலோரப் பகுதி மற்றும் வில்லியனூர், திருக்கனூர், பாகூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக புதுச்சேரியின் பிரதான சாலையான லால் பகதூர் சாஸ்திரி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதேபோல், பாவனன் நகர், கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட நகர பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனிடையே தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள தங்க வைக்க 200 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments