7 மாவட்டங்களுக்கு இன்று ரெட்அலர்ட்

0 14386

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்த வானிலை மையம், அந்த 7 மாவட்டங்களுக்கு சிகப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இன்று திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்த அம்மையம், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கன மழையும், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் 14ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னைக்கு நாளை அதிகனமழைக்கான சிகப்பு நிற எச்சரிக்கை விடுத்த வானிலை மையம், அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வரை வங்கக் கடலில் தமிழக - தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று இடை இடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என அறிவித்த வானிலை ஆய்வு மையம் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments