குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கடலூர் அருகே கரையை கடக்கும்

0 9849

வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே நாளை மாலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இதனை அடுத்து, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று மாலை வேளையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அது நாளை அதிகாலை வட தமிழக பகுதியை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா - வட தமிழக இடையே கடலூருக்கு அருகில் நாளை மாலை கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனால், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் நாளை காலை முதல் வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 13ஆம் தேதி அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அது உருவான பின் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments