தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முதல் இலவச உணவு விநியோகம்

0 3147
தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முதல் இலவச உணவு விநியோகம்

தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு இலவச உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. கனமழை தொடரும் வரை தமிழகம் முழுதிலும் உள்ள அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் நேற்று அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.காலை சிற்றுண்டியாக 5 இட்லி, இருகரண்டி பொங்கல் வீதம் வழங்கப்படுகிறது. ஏராளமானோர் அம்மா உணவகங்களில் உணவருந்தி செல்கின்றனர்.

மேலும், மதிய உணவாக கறிவேப்பிலை , சாம்பார் , தயிர் சாதமும், இரவில் சப்பாத்தியும் விலையில்லாமல் வழங்கப்படவுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments