கடத்தல் கும்பலை உயிரைப் பணயம் வைத்துப் பிடித்த தலைமைக் காவலருக்கு நட்சத்திரக் காவலர் விருது

0 2200

சென்னையில் தொழிலதிபரை கடத்திய கும்பலை உயிரைப் பணயம் வைத்துப்பிடித்த தலைமைக் காவலர் சரவணகுமார் இம்மாதத்தின் நட்சத்திரக் காவலராக தேர்வானார்.

சென்னை பெருநகர காவல்துறையில் சட்டம் ஒழுங்கு பணியிலும், குற்றப்புலனாய்வு, போக்குவரத்து காவல் துறையிலும் சிறப்பாக பணிபுரியும் காவலர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் நேரில் அழைத்து காவல் ஆணையர் பாராட்டு வெகுமதி அளிக்கும் நிகழ்வு நடந்து வருகிறது.

அதன்படி, இந்த மாதத்தின் நட்சத்திர காவலராக சென்னை சேத்துப்பட்டு காவல் நிலைய தலைமை காவலர் சரவணகுமார் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 3ம் தேதி மூஸா என்பவர் கடத்தப்பட்ட போது, கடத்தல் கும்பலின் காரின் முன்பகுதியில் தொங்கியபடி 2 கிலோ மீட்டர் தூரம் சென்று அந்தக் கும்பலை மடக்கிப் பிடித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments