கணவர் தாக்கியதாக இந்தி நடிகை பூனம் பாண்டே புகார்.. கணவர் சாம் பாம்பே அதிரடி கைது

0 5931

தன்னைத் தாக்கியதாக இந்தி நடிகை பூனம் பாண்டே அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.

தனது நீண்டநாள் காதலரான சாம் பாம்பே என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்ட நிலையில், இருவரும் தேனிலவுக்காக கோவா சென்ற இடத்தில் தகராறில் ஈடுபட்டனர். கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக போலீசிலும் புகார் அளித்தார். பின்னர் இருவரும் சமரசமாகி இணைந்தனர்.

இந்த நிலையில், தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சாம் பாம்பே தாக்கியதில் தலை, முகம் மற்றும் கண்களில் காயங்களுடன் பூனம் பாண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments