மரத் தச்சருக்கு அடித்த தீபாவளி ஜாக்பாட் பரிசு... ஒரே இரவில் மாறிய வாழ்க்கை

0 3781

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் அரசு வெளியிட்ட பம்பர் தீபாவளி குலுக்கல் லாட்டரியை வாங்கிய மரத் தச்சர் ஒருவர் 2 கோடி ரூபாய் பரிசை வென்று ஒரே இரவில் கோடீசுவரராகி விட்டார்.

பாட்டியாலா மாவட்டத்தைச் சேர்ந்த திரிபுரி பகுதியில் வசிக்கும் 34 வயதான நரேஷ்குமார் பரிசு கிடைத்ததை உறுதி செய்த பின்னர் சொல்ல வார்த்தையின்றி திக்குமாடிப் போனார். தமது கனவுகள் இப்படி நனவாகும் என்று கனவில் கூட நினைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

பரிசுபெற்ற சீட்டையும் தமது அடையாள ஆவணங்களையும் அவர் மாநில அரசின் லாட்டரிச்சீட்டு அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார். ஓரிரு நாட்களில் அவருடைய வங்கிக் கணக்கில் 2 கோடி ரூபாய் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments