டெல்டா மாவட்டங்களில், இடி மின்னலுடன் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

0 4362

வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை காலை தமிழக கரையை நெருங்ககூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி, நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழைக்கும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கன மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் இரண்டு மணி நேரத்திற்குள் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கனமழை காரணமாக 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments