கோவிட் ஏற்படுத்திய தாக்கத்தால் 31 நாடுகளில் மக்களின் சராசரி ஆயுட் காலம் குறைந்துள்ளதாக ஆய்வில் தகவல்

0 2911

கோவிட் ஏற்படுத்திய தாக்கத்தால் சென்ற ஆண்டில் 31 நாடுகளில் உள்ள மக்களின் சராசரி ஆயுட் காலம் குறைந்துள்ளதாக ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

37 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வில், 31 நாடுகளில் உள்ள மக்களின் வாழ்நாட்களிலிருந்து கோவிட் கொள்ளை நோய் 2 கோடியே 80 லட்சம் ஆண்டுகளை பறித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நாடுகளில் அதிகப்படியாக அமெரிக்கா, ரஷ்யா, பல்கேரியா, லித்துவேனியா மற்றும் போலாந்து மக்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.

அதே சமயம் கோவிட் கட்டுப்பாடுகளை கடுமையாக கடைப்பிடித்த நியூசிலாந்து, தைவான், தென் கொரிய, நார்வே உள்ளிட்ட நாடுகளின் மக்களின் சராசரி ஆயுட் காலம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments