தமிழகத்தில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு - தமிழ்நாடு அரசு

0 3640

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதித்து இதுவரை 36 ஆயிரத்து 220 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பேரிடர் மேலாண்மை சட்டபிரிவு 12ன் உட்பிரிவு 3 ஐ சுட்டிக்காட்டி, நிவாரணம் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிற மாநிலங்களில் கூடுதல் இழப்பீடு வழங்கியிருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள்,   கூடுதலாக இழப்பீடு வழங்க எந்த தடையும் இல்லை எனவும், அது குறித்து அடுத்த வாரம் தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments