சென்னையில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் நாசர் உத்தரவு

0 1937

சென்னையில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் உத்தரவிட்டுள்ளார்.

நடமாடும் பால் விற்பனை நிலையங்கள் மூலம் நகரின் பிரதான பகுதிகளில் பால் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யவும், ஆவின் பாலகங்கள், டெப்போக்களில் கூடுதலாக பால் பாக்கெட்டுகள் இருப்பு வைக்கவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பதனம் செய்து பேக்கிங் செய்யும் தொழிற்சாலையில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தண்ணீர் தேங்கி உள்ள தாழ்வான பகுதிகளில் படகுகள் மூலம் சென்று ஆவின் பால் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments