21 குண்டுகள் முழங்க காவல்துறையின் மரியாதையோடு மோப்பநாய் உடல் நல்லடக்கம்..!

0 2749

உடல் நலக்குறைவால் உயிரிழந்த இரண்டு வயதான ரூனி என்ற போலீஸ் மோப்பநாய், 21 குண்டுகள் முழங்க காவல்துறையின் மரியாதையோடு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் மோப்பநாய் படை பிரிவில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கண்டறியும் பணியில், டாபர்மென் வகையைச் சேர்ந்த இரண்டு வயதான ரூனி என்ற பெண் மோப்ப நாய் ஈடுபடுத்தப்பட்டது. இந்நிலையில், திடீர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மோப்பநாய்க்கு மரியாதை செலுத்தினர். பின்னர், 21 குண்டுகள் முழங்க, காவல்துறை மரியாதையுடன், மோப்பநாய் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments