தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நவ.10, 11 ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

0 26996

தொடர் மழை காரணமாக தமிழ்நாட்டிலுள்ள 9  மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், அது வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக தமிழக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், 9 மாவட்டங்களுக்கும் நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய இரு தினங்களும் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் நவம்பர் 10ஆம் தேதி புதன்கிழமையன்று விடுமுறை என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments