பருவமழை துவங்குவதற்கு முன்னர் தூர்வாரும் பணிகளை செய்யாத காரணத்தால் சென்னை பாதிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

0 4637

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தேவையான தூர்வாரும் பணிகளை செய்யாத காரணத்தால் மழை வெள்ளத்தில் சென்னை பாதிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

யானைகவுனி, திருவொற்றியூர், ஆர்.கே.நகர், மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பை அவர் ஆய்வு செய்தார். அதன் பின்னர் கொளத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூன்று நாட்களாகியும் இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் வடியாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments