புதுச்சேரியில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை

0 4537

தொடர் மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு மேலும் 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், புதுச்சேரியில் விட்டுட்டு பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது.

இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இரு தினங்களில் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறுவித்துள்ளதையடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை ஒரு நாள் மட்டும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments