பவானிசாகர் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு 10,000 கன அடியாக அதிகரிப்பு

0 4538

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஆற்றின் இருகரைகளையும் தொட்டு தண்ணீர் செல்கிறது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 103.36 அடியாக உள்ளது. அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று உபரி நீர் திறப்பு 8000 கன அடியாக இருந்த நிலையில் இன்று 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments