ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் பத்திரமாக திரும்பினர் நாசாவின் 4 வீரர்கள்

0 7625

பூமியிலிருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 200 நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வந்த நாசாவின் 4 வீரர்கள் பூமி திரும்பினர்.

ஸ்பேஸ் எக்ஸ்-ன் விண்கலம் மூலம் விண்வெளி நிலையத்தில் இருந்து கிளம்பிய வீரர்கள் சுமார் 8 மணி நேரம் பயணித்து புளோரிடா அருகே மெக்சிகோ வளைகுடா கடல் பகுதியில் வந்து இறங்கினர். இந்த குழுவில் அமெரிக்காவின் Shane Kimbrough , Megan McArthur, ஜப்பானின் Akihiko Hoshide மற்றும் பிரான்ஸின் Thomas Pesquet ஆகியோர் இருந்தனர்.

நால்வரும் வந்த கேப்சியூலில் கழிவறை பழுதானதால் டையப்பர் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதை சவால்களில் ஒன்றாக கருதியதாக வீரர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே ஜூலை மாதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விண்வெளி நிலையம் நிலை தடுமாறி சுற்றியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments