2015 வெள்ளத்திற்கு பின் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்.?

0 4801

மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், 2015ஆம் ஆண்டு வெள்ளத்திற்கு பின் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? என சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னையில் சாலை அகலப்படுத்துவது, நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டப்பட்டது. அதன் விசாரணையின்போது, 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பின், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பல கோடி ரூபாயில் திட்டங்கள் தீட்டப்பட்ட போதும், தற்போது சென்னை மழை நீரில் உள்ளதாக தெரிவித்தனர்.

2015ஆம் ஆண்டு வெள்ளத்தின் போதே நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் உள்ளிட்டவை தொடர்பாக பல உத்தரவுகள் பிறப்பித்துள்ளதாக தெரிவித்த நீதிமன்றம், மீண்டும் சென்னை இதேபோல் சூழ்நிலை சந்தித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தது. இதனை அடுத்து, ஒரு வாரத்தில் நிலைமையை சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிமன்றம், அவ்வாறு சரி செய்யாவிட்டால் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments