புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... "தமிழகத்திற்கு ரெட் அலர்ட்"!

0 23533

தெற்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்  எனவும், தமிழ்நாட்டில் இன்று முதல் கன முதல் மிக கனமழை வரையில் பெய்யும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிதாக உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த
24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் 11ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 காற்றழுத்த தாழ்வுப்பகுதி, விரைவிலேயே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதாலும், தமிழ்நாட்டிற்கு அதி கனமழை எச்சரிக்கையான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு, புதுச்சேரி கடற்பகுதிகளை நெருங்குவதால் இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும் எனவும், நாளை, நாளை மறுநாளான 10, 11 தேதிகளில் அதி கனமழை வரையில் பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உள்ளிட்ட காரணங்களால் கடலில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் தென்கிழக்கு வங்கக்கடல் உள்ளிட்ட வங்காள விரிகுடாவில் மணிக்கு 60 கி.மீ வரையில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments