இலங்கையில் கனமழை மற்றும் மின்னல் தாக்கி 9 பேர் பலி

0 3058

இலங்கையில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏறத்தாழ 25 மாவட்டங்களில் கொட்டிய கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்து 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களனி ஆறு உள்ள நீர்நிலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கொழும்பு, வத்தளை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments