ஏரி நிரம்பி தண்ணீர் ஊருக்குள்ள வருது... இவனுங்க மீன் அடிக்கிறானுங்க..! சென்னையன்ஸ் வேற மாறி..!

0 6384
ஏரி நிரம்பி தண்ணீர் ஊருக்குள்ள வருது இவனுங்க மீன் அடிக்கிறானுங்க..! சென்னையன்ஸ் வேற மாறி..!

சென்னையில் தொடர் மழைகாரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரால் மக்கள் ஒரு புறம் தத்தழித்துக் கொண்டிருக்க , மறுபுறம் புற நகர் பகுதிகளில் ஊருக்குள் பாயும் ஏரி நீரில்  நீந்தி வரும் மீன்களை சிலர் கட்டையால் தாக்கி வேட்டையாடி பொழுதை கழித்து வருகின்றனர்.

2 நாட்களாக இடை விடாது கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளை மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்தது. குறிப்பாக அசோக் நகர், கே.கே நகர், பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை,வடக்கு உஸ்மான் சாலை, ஜி.என்.செட்டி சாலை உள்ளிட்ட நகர் பகுதிகள் மழை நீர் தேங்கி காணப்பட்டது.

முதல் நாளைக்காட்டிலும் 2 வது நாளில் மாநகராட்சியின் நடவடிக்கையால் பெரும்பாலான பகுதிகளில் தேங்கி இருந்த மழை நீர் அகற்றப்பட்டது

வெள்ளம் புகுந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு பாலும், உணவு பொட்டலங்களும் அரிசியும் வழங்கப்பட்டது.

புழல் ஏரி உபரி நீர் வடபெரும்பாக்கத்தில் தொழிற்சாலைகளுக்கு செல்லும் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்த நிலையில் தொழிலாளர்கள் தெர்மகோல் படகு விட்டு பொழுதை கழித்து வருகின்றனர்.

அங்குள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வெளியே வர இயலாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், மழையா இருந்தால் என்ன ? வெயிலா இருந்தால் என்ன ? என்று இரு குடிமகன்கள் தங்கள் குடி உரிமையை தவறாமல் நிறைவேற்றினர்

இதற்கிடையே சென்னை அடுத்த ஆவடி அருகே உள்ள அண்ணனூர் ரயில் நிலைய சாலையில் ஏரியில் நிரம்பிய மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தண்ணீரில் சென்ற மீன்களை கட்டையால் அடித்து வேட்டையாடினர்.

தொடர் மழையால் ஒரு பக்கம் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள சில இளைஞர்கள் கவலையை மறந்து மீன்களை பிடித்துக் காட்ட, சென்னையின் மழைகால நிலைமையை கேலி செய்து நெட்டிசன்கள் மீம்ஸ்களால் வறுத்தெடுத்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments