மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

0 4043

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீடு குறித்து சிலர் விசாரித்ததாக, கார் ஓட்டுநர் ஒருவர் தெரிவித்ததை அடுத்து அம்பானியின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கார் ஓட்டுநர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். தன்னிடம் முகேஷ்அம்பானியின் ஆண்டிலியா வீடு எங்கிருக்கிறது என காரில் வந்த இருவர் கேட்டதாகவும், அவர்கள் கையில் பை வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆண்டிலியாவில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள போலீசார், கார்ஓட்டுநர் கூறிய தகவல் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் அம்பானியின் வீட்டருகே வெடிபொருட்களுடன் கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments