போபால் மருத்துவமனையில் தீப்பிடித்ததில் 4 குழந்தைகள் உடல்கருகி உயிரிழப்பு

0 2560

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையின் குழந்தைகள் ஐ.சி.யூ. வார்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தன.

வார்டில் மொத்தம் 40 குழந்தைகள் இருந்ததாகவும், 36 குழந்தைகள் மீட்கப்பட்டு வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மாநில மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் விஷ்வாஸ் சாராங்  தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையின் 3-வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், 8 குழுவாக பிரிந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments