தொடர் மழையால் வேகமாக நிரம்பி வரும் மேட்டூர் அணை, தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை

0 2912

தொடர் கனமழையினால் மேட்டூர் அணை நிரம்பி வருவதன் காரணமாக, 16 கண் மதகு வழியாக உபரி நீர் எந்த நேரமும் திறக்கப்படலாம் என்பதால், கால்வாய் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் நீர்மட்டம் தற்போது 117.61 அடியாக உள்ளது. ஏற்கனவே காவிரி டெல்டா பாசனத்திற்காக 100 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 350 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

நிர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணை அதன் முழு கொள்ளளவை நாளைக்குள் எட்டிவிடும் என கூறப்படுகிறது. அணை எந்த நேரமும் திறக்கபடலாம் என்பதால் தங்கமாபுரிப்பட்டினம், அண்ணா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments