சென்னையில் குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம் பிளாஸ்டிக் டிரம்களை மிதவை போல் பயன்படுத்தும் மக்கள்

0 3038

சென்னை மாங்காட்டில் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்ததால், பிளாஸ்டிக் டிரம்களை மிதவை போல மாற்றி, போக்குவரத்துக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

அங்குள்ள ஜனனி நகர் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அத்தியாவசியத் தேவைக்கு வெளியில் சென்று வர சிரமப்பட்ட மக்கள், ரசாயனங்களை சேமித்து வைக்கப் பயன்படும் நீல நிற டிரம்கள் இரண்டை பலகை ஒன்றின் மூலம் இணைத்து கட்டி மிதவை போல வடிவமைத்து, நீண்ட கயிறுகள் மூலம் பிரதான சாலைக்கும் குடியிருப்புக்கும் சென்று வருகின்றனர்.

தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments