அந்தியூர் அருகே தொடர் மழையால் பர்கூர் மலைச்சாலையில் மண் சரிவு, தமிழகம் கர்நாடகம் இடையே போக்குவரத்து துண்டிப்பு

0 2772

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் ராட்சத பாறைகள் சரிந்து மரங்களுடன் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக நெய்கரை என்ற இடத்தில் மண்சரிவினால்  ராட்சத பாறைகள் மரங்களுடன் சரிந்து விழுந்ததால், தமிழகத்திலிருந்து அந்தியூர், பர்கூர், வழியே கர்நாடகம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஊசிமலை, தேவர் மலை உள்ளிட்ட 32 மலைக் கிராமங்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து செல்லம்பாளையம் சோதனைச் சாவடியிலேயே வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. ராட்சத பாறைகளை அகற்றி, மலைச் சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments