2 ஆண்டுகளில் மின்சார கார்களின் விலை பெட்ரோல் கார்களை போல் குறையும் -அமைச்சர் நிதின் கட்கரி

0 3413

அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டில் விற்கப்படும் மின்சார கார்களின் விலை பெட்ரோல் காருக்கு இணையாக குறைந்து விடும் என மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

வெபினார் ஒன்றில் பேசிய அவர், மின்சார கார் உற்பத்திக்கு அரசு ஊக்கத்தொகை வழங்குவதுடன், முக்கிய நெடுஞ்சாலைகளில் மின்கார்களுக்கான சார்ஜிங் மையங்களை திறக்க உள்ளதால் இது சாத்தியம் என கூறினார்.

மின்சார கார்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படுதாகவும், அவற்றுக்கான லித்தியம் பேட்டரிகளின் விலை குறைந்து வருவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

பெட்ரோல் நிரப்பும் மையங்கள் சார்ஜிங் பாயின்டுகளை நிறுவ அனுமதிப்பதற்கான கொள்கை முடிவை அரசு ஏற்கனவே எடுத்துள்ளதாகவும், சார்ஜிங் மையங்களுக்கான மின்சாரம் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி வாயிலாக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments