தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நவம்பர்10, 11ல் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை

0 3370

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 10 மற்றும் 11ஆகிய தேதிகளில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் செவ்வாய்கிழமை புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்றும் அது உருவான பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக படிப்படியாக வலுப்பெறக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், வரும் 10ஆம் தேதியில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், வரும் 11ஆம் தேதி சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments