மழை வெள்ள பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி

0 2539

சென்னை கோடம்பாக்கம் ,  மேற்கு மாம்பலம் , கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் நேரில் கேட்டறிந்தார் .

மேற்கு மாம்பலம் பகுதியில் தரைத்தளம் முழுமையும் தண்ணீர் தேங்கி உள்ளதாக  குடியிருப்புவாசிகள் அப்போது தெரிவித்தனர். அதற்கு   துறையின் அதிகாரிகளிடம் தான் பேசி இருப்பதாகவும் மோட்டார் மூலம் அப்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர் முழுமையாக அகற்றப்படும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்தார்.

பெரும்பாலான பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கி இருந்ததால் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று பொதுமக்களின் குறைகளை எடப்பாடி  பழனிசாமி கேட்டறிந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments