வங்கி மேலாளர் எனக்கூறி மூதாட்டியிடம் ரூ 40 ஆயிரம் பணம் பறிப்பு

0 4476

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள வங்கியில் மூதாட்டி ஒருவரிடம் வங்கி மேலாளர் எனக் கூறி 40 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்ற மூதாட்டி, கனரா வங்கியில் உள்ள தனது சேமிப்பு கணக்கில் பணம் செலுத்த சென்றார். அவரிடம் சுமார் 40 வயதுள்ள நபர் ஒருவர், தான் வங்கி மேலாளர் என்றும், கணக்கில் பணம் செலுத்தி தருகிறேன் என்றும் கூறி பாஸ்புக்கையும், பணத்தையும் பெற்றுச் சென்றுள்ளார்.

வெகு நேரமாகியும் அந்த நபர் திரும்பி வராததால், மூதாட்டிக்கு பணம் பறிபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments