நவம்பர் 10, 11ல் கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் - வானிலை மையம்

0 4677

வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்க கடலில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

இதனை அடுத்து, பயிர்கள் அதிகளவில் சேதம் அடைய வாய்ப்பிருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments