மூங்கில்காடு ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு... காட்டாற்று வெள்ளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்லும் மக்கள்

0 2487

கொடைக்கானல் அருகே மலைக்கிராமத்துக்குச் செல்லும் வழியில் குறுக்கிடும் காட்டாற்று வெள்ளத்தைக் கடந்து ஆபத்தான முறையில் மக்கள் சென்று வருகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நேற்று இரவு முதல் காற்றுடன் கூடிய மிதமான மழையானது தொடர்ந்து பெய்து வருகிறது.

இங்குள்ள பள்ளங்கி, கோம்பை பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், அங்கிருந்து மூங்கில்காடு செல்லும் வழியில் திடீர் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

இதனால் மறுகரைக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தின் நடுவே முறிந்து கிடக்கும் மரக்கிளையில் ஆபத்தான முறையில் அப்பகுதி மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments