ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலத்தில் சென்ற 4 விண்வெளி வீரர்கள் மோசமான வானிலையால் பூமிக்கு திரும்புவதில் தாமதம் - நாசா

0 5206

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலத்தில் பயணித்தவர்கள், மோசமான வானிலை காரணமாக பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

ஸ்பேஸ்-எக்சின் க்ரூ டிராகன்  விண்கலம் மூலம் ஆய்வுப் பணிக்காக கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நாசாவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்கள், ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்தின் வீரர் ஒருவர் உள்ளிட்ட 4 பேர் விண்ணிற்கு சென்றனர். க்ரூ-2  என பெயரிப்பட்ட இந்த விண்வெளி ஆய்வு திட்டத்தில் விண்ணுக்கு சென்று பணியினை முடித்த அவர்கள், பூமிக்கு திரும்பவிருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக பயணம் தாமதமானதாக தெரிவித்த நாசா, அவர்கள் இன்று சர்வதேச ஆய்வு மையத்தில் இருந்து புறப்படுவார்கள் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், க்ரூ-3 ((Crew-3)) திட்டத்தில் விண்ணுக்கு செல்லும் பணி, பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நவம்பர் 10ஆம் தேதி ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments