கனமழை காரணமாக வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்த 9 மாத கர்ப்பிணி பெண்... படகு மூலம் பத்திரமாக மீட்பு

0 3949

சென்னை வேளச்சேரி பகுதியில் மழை வெள்ளத்தால் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்த 9 மாத கர்ப்பிணி பெண்ணை போலீசார் பத்திரமாக படகு மூலம் மீட்டனர்.

கனமழையால் வேளச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  ஏ.ஜி.எஸ். காலனி, சொக்கலிங்கம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பு அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்த  9 மாத கர்ப்பிணி பெண் ஜெயந்தியை போலீசார் படகு மூலம் மீட்டு அவரது உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

மேலும் அப்பகுதியில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்த 50-க்கும் மேற்பட்ட நபர்களை  பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments