பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்... ஆபத்தை உணராமல் வெள்ளாற்றை கடந்து செல்லும் கிராம மக்கள்

0 4333

கடலூர் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பழவங்குடியில், பால வசதியில்லாத நிலையில், ஆபத்தை உணராமல் பெண்கள் உள்பட பலர் பெருக்கெடுத்து ஓடும் நெடுஞ்சேரி வெள்ளாற்றின் குறுக்கே நடந்து ஆற்றை கடந்து வருகின்றனர்.

ஸ்ரீ முஷ்ணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கருவேப்பிலங்குறிச்சி வழியாக சுற்றிச் செல்ல விரும்பாமல், வெள்ளாற்றை கடந்து செல்கின்றனர். மேம்பாலம் இல்லாததால், அபாயகரமான நிலையில் உள்ள ஆற்றைக் கடந்து சுபகாரியத்திற்கு பொதுமக்கள் செல்லும் வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

ஏற்கெனவே திட்டமிட்டபடி, கள்ளிப்பாடி-காவனூர் இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments