வீட்டின் பூட்டை உடைத்து 138 பவுன் நகைகள், 8 கிலோ வெள்ளி, ஒன்றரை லட்ச ரூபாய் கொள்ளை !

0 4054

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 138 பவுன் தங்க நகைகள், 8 கிலோ வெள்ளிபொருட்கள், ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள வைரத்தோடு, 30 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரகம்பி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மனைவி லதா. பெரகம்பியில் தனியாக வசித்து வரும் லதா சென்னை சென்ற நிலையில், வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர்.. இது குறித்து லதாவிற்கு தகவல் தெரிவித்தனர். லதா திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் ஸ்பார்க் தடயங்களை சேகரித்தனர்.இச்சம்பவம் குறித்து எஸ்பி மூர்த்தி தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments