காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தலைமைக் காவலர் ஒருவர் வீரமரணம்

0 2909

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தலைமைக் காவலர் ஒருவர் வீரமரணமடைந்தார்.

பட்டமலூ என்ற இடத்தைச் சேர்ந்த தவ்ஷீப் அகமது என்பது அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் தனது வீட்டருகே சென்று கொண்டிருந்த போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார்.

இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தவ்ஷீப் அகமது சிகிச்சை பலனின்றி காலமானார். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதிக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டு தீவிரவாதிகளைத் தேடும்பணி தீவிரமடைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments