பஞ்சாப்: பெட்ரோல் ரூ.10, டீசல் ரூ.5 குறைப்பு.! கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் விலைகுறைப்பு

0 3703

 பஞ்சாப் மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைத்துள்ளது.

இதனால் அம்மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 ரூபாயும் டீசல் விலை 5 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் இதுபோன்ற விலைக்குறைப்பு நடந்ததில்லை என்று பஞ்சாப் முதலமைச்சர் சரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியை விட 9 ரூபாய் குறைவாக பஞ்சாபில் பெட்ரோல் விற்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

பஞ்சாபில் பெட்ரோல் லிட்டருக்கு 95 ரூபாயும் டீசல் லிட்டருக்கு 83 ரூபாய் 75 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.தீபாவளிப் பரிசாக மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலைகுறைப்பை அறிவித்தது. இதனையடுத்து பாஜக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் ஆளும் பத்து மாநில அரசுகள் ஏற்கனவே பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியைக் குறைத்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments