கனமழையின் காரணமாக தமிழகத்தில் 4 பேர் உயிரிழப்பு - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

0 3197

மிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கனமழையால் 47 கால்நடைகள் உயிரிழந்ததாகவும், 260 வீடுகள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், யாருமே எதிர்பார்க்காத வகையில் கனமழை பெய்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments