பேசின்பிரிட்ஜ் ரயில் நிலைய இருப்புபாதை முழுதும் மழைநீரால் மூடல்... சென்ட்ரலுக்கு வரும் ரயில்கள் புறநகரிலே நிறுத்தம்

0 6568

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள  பேசின்பிரிட்ஜ் ரயில் நிலைய  தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியதால் அம்பத்தூர் மற்றும் ஆவடி ரயில் நிலையங்களிலேயே வெளியூரிலிருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

கனமழை காரணமாக பேசின்பிரிட்ஜ் ரயில் நிலைய இருப்புபாதை முழுதையும் மழைநீர் சூழ்ந்துள்ளது. அதனால், வெளியூர்களிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரும் ரயில்கள் காலதாமதமாக வருவதோடு, சென்னையின் புறநகரில் அமைந்துள்ள ரயில்நிலையங்களிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அம்பத்தூர்,ஆவடி போன்ற ரயில்நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பேருந்து அல்லது ஆட்டோக்களில் பயணம் செய்தே சென்னைக்கு பயணிகள் வர வேண்டிய சூழல் உருவானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments