புதுச்சேரியில் 2 நாட்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

0 2973

தொடர் மழை காரணமாகப் புதுச்சேரியில் நாளை மற்றும் நாளை மறுநாள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதை அடுத்து, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இரு தினங்களுக்கு விடுமுறை அளிக்க கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார்.

ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை, நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட இருந்த நிலையில், தற்போது மழையின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments