கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம்

0 2377

சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கிய நிலையில், 6 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

ஈ.வி.ஆர்.சாலை கங்குரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப் பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை உள்ளிட்ட 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

மேலும், மழை நீர் பெருக்கு காரணமாக ஈ.வி.ஆர். சாலையில், சென்ட்ரல் ரயில்வே சந்திப்பில் இருந்து நாயர் சாலை சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் திருப்பி விடப்படும் என அறிவித்த போலீசார், ஆற்காடு சாலை 80 அடி ரோட்டில் இருந்து ராஜ மன்னார் சாலை நோக்கி செல்லவும், பேந்தியன் ரவுண்டானாவில் இருந்து ராஜரத்தினம் மைதானம் நோக்கி செல்லவும் அனுமதியில்லை என தெரிவித்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments