கனமழையால், உறுதியிழந்து ஆட்டோ மீது சாய்ந்த பழமையான மரம்... உயிர்தப்பிய ஆட்டோ ஓட்டுநர்

0 3006

மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள பழமை வாய்ந்த மரம் திடீரென சாலையில் சாய்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நேற்றிரவு மதுரையில் விடிய விடிய கொட்டிய கனமழையால் ஆரப்பாளையம் மதுரா கோட்ஸ் மில் அருகே இருந்த பழமை வாய்ந்த அத்திமரத்தின் வேர் உறுதியிழந்து, காலையில், பரபரப்பான போக்குவரத்து நேரத்தில் சாலையின் நடுவே சாய்ந்தது.

அப்போது அவ்வழியே சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீது மரம் விழுந்ததில் ஆட்டோ நசுங்கி சேதமானது. நல்வாய்ப்பாக ஆட்டோ ஒட்டுநர் உயிர்தப்பினார். மேலும் மரத்தடியில் நின்றிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் சேதமுற்றன.

இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் போக்குவரதிற்கு இடையூறாக இருந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments